ஒரு மாதத்தில் 176 துப்பாக்கிகள், பொலிஸாரிடம் சிக்கின

🕔 July 9, 2020

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு வகையான 176 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2020.06.06 முதல் 2020.07.08 வரையான காலப்பகுதியிலேயே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரி 56 துப்பாக்கிகள் 11, ரி 81 ரக துப்பாக்கி ஒன்று, போரா 12 ரக துப்பாக்கி 42, பிஸ்டல் 04, கல்கடஸ் 29, ரிபீடர் 74 மற்றும் வேறு வகை துப்பாக்கிகள் 15 இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்