மின் கட்டணங்களில் 25 வீதம் கழிவு; பணத்தை செலுத்த 03 மாதம் அவகாசம்: அமைச்சரவைப் பேச்சாளர்

🕔 July 9, 2020

மாதத்துக்கு 90 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்திய நுகர்வோருக்கு, மின் கட்டணங்களில் கழிவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

அதன்படி 90 அலகுகளுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தியோருக்கு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணத்தில் 25 சதவீதம் கழிவு வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்டதில் மின்சார துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த பிரேரணைக்கு இணங்க, இந்த கழிவு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த மின் கட்டணங்களைச் செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும்.

தாமதமாக கட்டணத்தைச் செலுத்தியமைக்காக நுகரவோரிடமிருந்து அபராதக் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்