முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

🕔 July 9, 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஈஸ்டர் தாக்குதல்தாரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்டு, முன்னாள் அமைச்சரின் இளைய சகோதரர் றியாஜ் பதியுதீன் என்பவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments