குடும்பத்துக்கு துன்புறுத்தல்; தேர்தல் வேட்புமனுவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பாலித: மீண்டும் களத்தில்

🕔 July 8, 2020

னது வேட்பு மனுவிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதிய களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பாலித தேவப்பெரும; மீண்டும் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக வேட்பு மனுவிலிருந்து விலக முடியது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அவருக்கு அறிவித்தமையினை அடுத்தே, அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

தேர்தல் ஆணைக் குழு அலுவலகத்துக்கு வெளியில் வைத்து, அவர் ஊடகங்களிடம் பேசுகையில்; வேட்பாளர் மனுவிலிருந்து விலகுவதாக தான் சமர்ப்பித்த கடிதத்தை தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார் என்றும், வேட்புமனுக்களை ஒப்படைத்த பின்னர் வேட்பாளர்கள் பின்வாங்க முடியாது என்று ஆணைக்குழுவின் தலைவர் கூறியதாகவும் தெரிவித்தார்.

“நான் எனது வேட்புமனுவை சட்டப்பூர்வமாக திரும்பப் பெற விரும்பினேன், எனவே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்தித்து வேட்பு மனுவிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்தேன். இருந்த போதும் என்னால் சட்டப்பூர்வமாக அவ்வாறு செய்ய முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். ஆகவே எனது பிரச்சாரத்தை புதிய வீரியத்துடன் மீண்டும் தொடங்குவேன்” எனவும், பாலித கூறினார்.

தானும் தனது குடும்பத்தினரும் அரசியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாக செவ்வாய்கிழமையன்று தெரிவித்த பாலித தேவபெரும; அரசியலில் இருந்து விலகி தனது மனைவி மற்றும் மகனைப் பார்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

Comments