அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் லஞ்சம் பெற்றவருக்கு விளக்க மறியல்

🕔 July 8, 2020

ஞ்சம் பெற்றமை தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணியாளர் ஒருவருக்கான கடமைகளை அவர் விரும்பிய பிரிவிற்கு மாற்றி வழங்குவதற்காக சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தரால் 15,000 ரூபா லஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இதில் 10,000 ரூபாவை இன்று பெற்றுக்கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும்ட 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Comments