கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

🕔 July 1, 2020

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் இடங்களை காப்பதற்கான செயலணியில் தமழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த இணக்கத்தை ஜனாதிபதி வெளியிட்டதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நிபுணர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

11 பேரைக் கொண்ட மேற்படி செயலணியில் தற்போது சிங்களவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்