ஈஸ்டர் தாக்குதல்தாரி இல்ஹாம், மனைவியிடம் கொடுத்துச் சென்ற குரல் பதிவு: அவர் கூறிய விடயங்கள் என்ன? விவரம் உள்ளே

🕔 June 11, 2020

னது சகோதரன் இன்ஷாப் உடன், மிக உயர்ந்த செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் ஊடாக ‘நிபான்’ நிலைக்கு தாம் செல்வதாகவும் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவரான இல்ஹாம் அஹமட், குரல் பதிவில் கூறியிருந்தார் என, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குரல் பதிவை ‘பென் டிரைவ்’ ஒன்றில் சேமித்து, அதனை தனது பெற்றோருக்கு வழங்கச் சொல்லி, அவரின் மனைவியிடம் கையளித்திருந்ததாகவும் அந்த அதிகாரி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ‘பென் டிரைவ்’ இல் இரண்டு குரல் பதிவுகள் இருந்ததாகவும், முதல் குரல் 20ஆம் திகதி இரவு 11.48க்கும், மற்றைய குரல் 21ஆம் திகதி அதிகாலை 12.03க்கும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குரல் பதிவுகள் ‘தாய், தந்தை, சகோதன், சகோதரி ஆகியோருக்கு வழங்கப்படும் தகவல்’ என ஆரம்பிக்கின்றன.

தனது தந்தை மார்க்கத்தைப் பின்பற்றும் விதம், ஏனைய மதங்களுடன் செயற்படுதல், பிக்குகளுக்கு உதவி வழங்குதல் உள்ளிட்ட விடங்கள் குறித்து அந்த குரல் பதிவில் இல்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குரல் பதிவு உறவினர்களுக்கு கிடைக்கும் போது, தான் இறைவனிடம் சென்றடைந்திருப்பேன் எனவும் அதில் அவர் கூறியுள்ளார்.

ஷரியா சட்டம் இலங்கைக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குரல் பதிவின் ஊடாக தனது தந்தை மற்றும் தாய் ஆகியோரிடம் இல்ஹாம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

தன்னால் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தவர்களுக்கு பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்றும், பொலிஸார் அவர்களைக் கைது செய்யக் கூடும் என்றும், அந்தக் குரல் பதிவில் அவர் கூறியுள்ளார்.

ஜிஹாத் என்பது இந்தக் காலத்தில் முக்கியமானது என்று, அந்த குரல் பதிவில் இல்ஹாம் தெரிவித்துள்ளதாகவும், அந்த புலனாய்வு அதிகாரி கூறியுள்ளார்.

குறித்த பென் டிரைவ்விலுள்ள குரல் பதிவுகளை தனது பெற்றோரை கேட்கச் செய்யுமாறு கூறி, அதனை தனது மனைவியிடம் ஒப்படைத்த இஸ்ஹாம், அன்றிரவே தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து, தெமட்டகொடயிலுள்ள இல்ஹாமின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்ற போது, குறித்த குரல் பதிவுகளை அவரின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் சாட்சியமளித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் இஸ்ஹாமின் மனைவி – வீட்டின் மேல் மாடியில் தனது குழந்தைகளுடன் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்.

இதன்போது கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மூவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்