அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு

🕔 May 20, 2020

வ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசிங்கவி தெரிவிக்கையில்;

அண்மையில் இடம்பெற்ற பிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் பங்குபற்றிய கூட்டத்தில், நாளொன்றுக்கான கொடுப்பனவை அரசின் கொவிட் – 19 நிதியத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது என்றார்.

எவ்வாறாயினும் இதற்கு சம்மதம் தெரிவிக்காதவர்களின் பணம் மீள வழங்கப்படவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமும் – அறிவித்தலின்றி இவ்வாறு ‘வெட்டி’எடுக்கப்பட்டுள்ளமை’ குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்