எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

🕔 May 9, 2020

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டோர் தொடர்பான இந்த காலாண்டுக்கான பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதும், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட போது, அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

ஆயினும் இது குறித்து அமெரிக்கா அப்போது தெளிவான பதில் ஒன்றை வழங்கியிருக்கவில்லை.

எவ்வாறாயினும், பிரஜா உரிமையை நீக்கிக் கொண்டோர் தொடர்பான விடயங்களைக் கையாளும் நடைமுறைக்கு சற்று நீடித்த காலம் எடுக்கும் என்பதால், அந்த நடவடிக்கை நிறைவடைந்த பின்னர்தான், அதுகுறித்து சட்ட ரீதியாக அமெரிக்கா அறிவிக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்