சஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் சுற்றி வளைப்பு

🕔 May 8, 2020

பழுலுல்லாஹ் பர்ஹான் –

ஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிம் குழுவின் – மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றினை, குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை சுற்று வளைத்துத் தேடுதல் நடத்தினார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி – செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதி ஒன்றிலேயே இவ்வாறு தேடுதல் நடத்தப்பட்டது.

கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப் புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட மேற்படி விடுதி, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் முழுமையாக சோதனையிடப்பட்டது.

அத்தோடு கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், குறித்த விடுதியின் உரிமையாளரிடம் ஆரம்ப கட்ட விசாரணையை நடத்தியதோடு, சம்பந்தப்பட்ட விடுதிக் கட்டிடத்தையும், அது அமைந்துள்ள காணியையும் சோதனையிட்டனர்.

குறித்த விடுதியில் ஏப்ரல் 21 ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்படட்தாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த விடுதி சுற்றி வளைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டது.

கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள குறித்த விடுதி சோதனையிடப்பட்ட போது குற்றப் புலனாய்வு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

படம்: எம்.எஸ். நூர்தீன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்