பிரித்தானிய வர்த்தக அமைச்சராக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்த்தன நியமனம்

🕔 May 7, 2020

பிரித்தானியவின் வர்த்தக அமைச்சராக அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் தந்தை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்த முக்கியமான தருணத்தில் வர்த்தக அமைச்சராக பணியாற்றுமாறு பிரதமர் போரிஸ் ஜோன்சன் கேட்டுள்ளமை பெரும் பாக்கியம்’ என்று 33 வயதான ரணில் ஜெயவர்தன தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

2015 முதல் வடகிழக்கு ஹாம்ப்ஷயருக்கான நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் ஜெயவர்தன இருந்து வருகின்றார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் இலங்கை தொடர்பான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்