ஆந்திராவிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் 13 பேர் பலி

🕔 May 7, 2020
எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா – தொழிற்சாலை

ந்தியா – ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக 13 பேர் பலியாகியுள்ளனர்.

எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் ரெஜிபோர்ஃம் உற்பத்தி தொலைற்சாலை ஒன்றிலேயே இந்த ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

அங்கு அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், அந்த தொழிற்சாலை இன்று திறக்கப்பட்ட நிலையில், காலை 3.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது.

நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.

“தொலைற்சாலையிலிருந்து 1 தொடக்கம் 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் சுமார் 03 கிலோ மீட்டர் தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசியுள்ளது. எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments