‘காதல் வைரஸ்’ உருவாக்கிய நபர்: 20 வருடங்களின் பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார்

🕔 May 3, 2020

லகின் முதல் மிகப்பெரிய கணினி வைரஸை உருவாக்கிய நபர், தாம் செய்த குற்றத்தை இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒப்புக் கொண்டுள்ளார்.

‘காதல் வைரஸ்’ என்று அழைக்கப்பட்ட அந்த வைரஸ், கண்டங்களைத் தாண்டி உலகின் பல கணினிகளைத் தாக்கியது.

இப்போது 44 வயதாகும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒனெல் டி கஸ்மேன் எனும் அந்த நபர் – தாம் அந்த ‘காதல் வைரஸை’ சர்வதேச அளவில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கவில்லை என்றும், பிறர் கணினி பாஸ்வேர்டை திருடி இணையத்தை இலவசமாக பயன்படுத்தவே அந்த வைரஸை உருவாக்கினேன் என்றும் கூறியுள்ளார்.

தாம் உருவாக்கிய வைரஸ் – கண்டங்களைத் தாண்டி பல கணினிகளைத் தாக்கியதற்காக தான் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மே 4, 2000 ஆம் ஆண்டு அந்த வைரஸ் பரவியது. உங்களுக்கான காதல் கடிதம் (LOVE-LETTER-FOR-YOU) என்று மின்னஞ்சல் வரும். அதை கிளிக் செய்தால் அந்த வைரஸை கணினியைத் தாக்கும். இப்படியாக அந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த வைரஸ் ஒரே நாளில் 4.5 கோடி கணினிகளைத் தாக்கியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்