பிர்அவ்னின் கடவுச்சீட்டு

🕔 April 22, 2020

– அக்பர் ரபீக் –

பிர் அவ்ன் என்றால் அரசன் என்று அர்த்தமாகும்.

ராம்சேஸ் II, கிறிஸ்துவிற்கு முன் 1304 இல் பிறந்து 1214 செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட எகிப்தியர்களின் அரசன். இவன் எகிப்தின் மன்னர் பரம்பரையில் 19 வது அரசன். இந்த அரசர்களை அல்குரானும் பழைய பைபிளும் ‘பிர் அவ்ன்’ என்றே கூறுகிறது.

1898 இல் ராம்சேஸ் II இன் சடலம் செங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது.

1974 இல் சடலம் பிரான்ஸுக்கு ஆய்வுக்காக அனுப்பபட்டது. எகிப்தின் சட்டப்படி கடவுச்சீட்டு இல்லாமல் எவரும் நாட்டைவிட்டு வெளியே வெளியேறமுடியாது. ராம்சேஸ் II ஐ பிரான்ஸிற்கு அனுப்புவதற்காக, அந்நேரம் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டையே மேலே காண்கின்றீர்கள்.

ராம்சேஸ் II, 66 வருடங்கள் எகிப்தின் மன்னராக அரியனையை அலங்கரித்தவர். மூசா (அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்களையும் அவர்களின் சமூகமான இஸ்ரேலியர்களையும் அழிப்பதற்காக பின் தொடர்ந்து வந்த பிர்அவ்ன் ஐயும் அவனது படையையும் அல்லாஹ் கடலில் மூழ்கடித்தழித்தான்.

பிரான்ஸ் சென்ற பிர் அவ்ன், மம்மியாக – மொரிஸ் புகைல் என்பவரின் ஆய்வுகூடத்தில் வைக்கப்பட்டது. மொரிஸ் புகைல், தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பார்த்தவண்ணம் இப்படிக்கூறினார்; “என் முன்னால் இருக்கும் இந்த மம்மி, மூசாவை துரத்திவந்த அரசன் என்பது எவ்வாறு உண்மையாகும்? 1400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த முஹம்மத் எப்படி இதனை அறிவார்?”.

பழைய பைபில், பிர் அவ்ன் – மூசா (அலை) அவர்களையும், அவரை பிந்தொடர்ந்த இஸ்ரேலியர்களையும் கடலில் பின்தொடந்து வந்தான் எனக் குறிப்பிட்டிருந்தாலும், அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதுபற்றி எதுவும் கூறவில்லை. இதனால் பேராசிரியர் மொரிஸ் புகைல் ஆச்சரியமடைந்தார். இதற்கான விடையைக் காணும்வரை அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

ஆய்வுகள் நிறைவுபெற்ற பின், மம்மி மீளவும் எகிப்திற்கு அனுப்ப்பட்டது. முஸ்லிம் விஞ்ஞானிகள் இதுபற்றி என்ன கருத்துக் கொண்டிருக்கின்றார்கள் என அறிவதற்காக, பேராசிரியர் மொரிஸ் புகைல் எகிப்துக்கு பயணமானார்.

எகிப்தில் விஞ்ஞானிகளுடனான ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்தார். அவரது நோக்கம் முன்வைக்கப்பட்டது. அச்சபையில் இருந்து எழுந்த முஸ்லிம் விஞ்ஞானி ஒருவர் எழுந்து நின்று;

“மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம். அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: ‘இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்’ என்று கூறினான் (10:90)”.

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.” (10:91)

“எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது) (10:92)

என்ற குர்ஆன் வசனங்களை ஓதிக்காண்பித்தார். இதனைக்கேட்ட பேராசிரியர் மொரிஸ் புகைல் எழுந்து நின்று; “நான் இஸ்லாத்தை நம்புகின்றேன். அல்குரானை நம்புகின்றேன்” என உரக்கச் சொன்னார்.

பேராசிரியர் மொரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவுனார். பிந்திய நாட்களில் அல்குரானை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிக்கு மொழியாக்கமும் செய்தார். அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்