சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

🕔 April 17, 2020

– ஏ.எல். எம். ஷினாஸ் –      

ல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி – சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு மரக்கறி வியாபாரிகள் போன்று சூட்சுமமாகச் சென்று சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில், இவர் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்