கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி

🕔 April 16, 2020

மெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று புதன்கிழமை மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 2600 ஆக பதிவாகியுள்ளது.

இது அமெரிக்காவில் மட்டுமல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் இது வரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிக பட்ச உயிரிழப்பாகும்.

அந்நாட்டில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் முக்கியமாக நிவ்யோக் நகரில் மட்டும் அதிகபட்சமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நாளாந்தம் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்: அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதன் உச்சத்தை அடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த மாதத்திலேயே சில மாகாணங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பொருளாதார தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியில் தற்போதைய நிலையில் அமெரிக்க மாகாணங்கள் வலுவான நிலையில் உள்ளது என்றும் கூறியிருந்தார்.

உலகளவில் இன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணி வரையில் கொரோனா தொற்றினால் 20 லட்சத்து 84 ஆயிரத்து 735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

01 லட்சத்து 3 ஆயிரத்து 685பேர் கொரோனா தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்