நாவிதன்வெளி பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 46 பேர் விடுவிக்கப்பட்டனர்

🕔 April 6, 2020

– எம்.எம். ஜபீர் –

நாவிதன்வெளி, சவளக்கடை, மத்தியமுகாம் பிரதேசங்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நிலையில் 14 நாட்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 46 பேர் இன்று திங்கட்கிழமை மருத்துவ சான்றிதழ் வழங்கி விடுவிக்கப்பட்டனர்.

கட்டார், டுபாய், சவூதி அரேபியா, இந்தியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் நாடு திரும்பிய இவர்களுக்கு எவ்வித கொரோனா தொற்று அறிகுறிகளும் இல்லாத நிலையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜெ. மதன் உள்ளிட்ட நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே. மனோ ரஞ்ஜிதன், பொது சுகாதார பரிசோதர்களான ஏ.எச்.எம். ஜாபீர், ஏ.எம். றம்சீன் உள்ளிட்ட சுகாதார துறை உத்தியோகத்தர்கள் இவர்களின் இல்லங்களுக்கு சென்று தனிமைப்படுத்தும் காலம் முடைவடைந்துள்ளதை உறுதிப்படுத்தி மருத்துவ சான்றிதழ் வழங்கி வைத்தனர்.

காய்ச்சல், தடுமல், இருமல், தொண்டை நோ அறிகுறிகள் ஏதுவும் ஏற்பாட்டால் பிரதேச பொது சுகாதார பரிசோதகளுக்கு தெரியப்படுத்துமாறும் மேலதிக தேவைக்கு நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அவரச தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்