அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு

🕔 April 6, 2020

“கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ட்ரம்ப்; ‘நாம் நமது கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து அறிந்து வருகிறோம். அது கடினமானதாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறது. ஆனால், நாம் மிகக் கடினமானவர்கள். மேலும், அதை விடவும் ஸ்மார்ட்டானவர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ‘கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை குறை சொல்வதில் காட்டிய கவனத்தில், நூற்றில் ஒரு பங்கு கூட, அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் காட்டவில்லை’ என, பலரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை விமர்சித்து வருகின்றனர். 

அமெரிக்க அரசின் மெத்தனத்தால், அங்கு கொரோனா வைரஸ் இனால் ஒரு லட்சம் தொடக்கம் 2.4 லட்சம் வரை உயிரிழப்புகள் ஏற்படலாம் என, அஞ்சப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்