உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

🕔 April 3, 2020

ஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை வழங்கியுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மிக நீண்ட காலமாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த உதயங்க வீரதுங்க ஓமானில் இருந்து, கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி இரவு நாடு திரும்பினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்