நாய், பூனை இறைச்சிகளை உண்பதற்கு தடை: சீன நகரமொன்று சட்டம் கொண்டு வருகிறது

🕔 April 3, 2020

நாய் மற்றும் பூனை இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் உண்பதற்கும் சீனாவின் ஷென்ஸென் நகரம் தடை விதிக்கவுள்ளது.

இவ்வாறு தடை விதிக்கும் முதலாவது சீன நகரம் இதுவாகும்.

வன விலங்குகளின் இறைச்சியுடன் கொரோனா வைரஸ் இணைத்துப் பேச பட்ட பின்னர், காட்டு விலங்குகளின் இறைச்சிகளை வியாபாரம் செய்தல் மற்றும் அவற்றினை நுகர்வதற்கான தடையினை ஏற்படுத்துவதற்கான தூண்டுதல் சீன அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், நாய் மற்றும் பூனை இறைச்சிகளைத் தடை செய்வதற்கான புதிய சட்டத்தை, மே 01ஆம் திகதி தொடக்கம் ஷென்ஸென் நகரம் நடைமுறைக்கு கொண்டுவருகிறது.

ஆசியா முழுவதும் இறைச்சிக்காக ஆண்டுக்கு 30 மில்லியன் நாய்கள் கொல்லப்படுவதாக ‘ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல்’ எனும் அமைப்பு கூறுகிறது.

இருப்பினும், சீனாவில் நாய் இறைச்சி சாப்பிடுவது பொதுவானதல்ல என்றும், பெரும்பான்மையான சீன மக்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும், அதனை அவர்கள் விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர்.

“நாய்களும் பூனைகளும் மற்ற எல்லா விலங்குகளையும் விட மனிதர்களுடன் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் நாய், பூனை மற்றும் பிற செல்லப்பிராணிகளை உட்கொள்வதை வளர்ந்த நாடுகளும், ஹொங்கொங் மற்றும் தாய்வான் போன்ற நாடுகளும் தடைசெய்துள்ளன” என்று ஷென்ஜென் நகர நிருவாகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்