கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது

🕔 April 2, 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மருதானைப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரின் உடல் இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது.

முல்லேரியா – கொட்டிகாவத்தை மயானத்தில் அந்த உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மொஹமட் ஜனூஸ் என்பவர் நேற்று புதன்கிழமை மரணமடைந்தார்.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார்.

இவரின் உடலை தகனம் செய்யாமல், புதைப்பதற்கு (அடக்கம் செய்வதற்கு) முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், அந்த முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை.

கொரோனாவினால் இதற்கு முன்னர் உயிரிழந்தவரும் இஸ்லாமியவர் என்பதோடு, அவரின் உடலும் தகனம் செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் உடலை இவ்வாறு தகனம் செய்கின்றமை தொடர்பில், அந்த சமூகத்தினர் தமது கடுமையான கண்டனங்களையும், வருத்தங்களையும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க, நேற்று சுற்று நிரூபம் ஒன்றினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்:

01) கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

02) நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்