நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது

🕔 April 2, 2020

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்களை உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களினதும் உரிமையாளர்களையும் நேற்று புதன்கிழமை இரவு உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்னவின் உத்தரவுக்கு இணங்க, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு தலைமறைவாகி இருந்தவர்களில் அமெரிக்க பிரஜைகள் இருவர், சீனப் பிரஜைகள் இருவர், பின்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் பிரித்தானிய பிரஜைகள் தலா ஒருவர் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்வர்கள் ஏழு பேரையும் ஹோட்டல்களிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உப்புவெளி பொலிஸார் உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒரு வெளிநாட்டவரின் வீசா கலாவதியாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேற்படி வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணம், ஹபரணை, அனுராதபுரம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்