புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் காலம் நீடிப்பு

🕔 March 31, 2020

புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரும் காலக்கெடுவை நீடிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2019/2020ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரும் காலக்கெடுவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் வரை, இந்தக் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் மார்ச் 13 தொடக்கம் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

Comments