ரஜினியின் கொரோனா பற்றிய வீடியோவை நீக்கியது ட்விட்டர்

🕔 March 21, 2020

டிகர் ரஜினிகாந்த் – கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்” என்பது உள்ளிட்ட சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோ அவரது ட்விட்டர், யு டியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறி ‘ட்விட்டர்’ அந்த பதிவை நீக்கியுள்ளது.

இருந்தபோதும், அந்த வீடியோ யு டியூபில் பார்க்கக் கிடைக்கிறது.

‘ட்விட்டர்’இல் ரஜினிகாந்தை 57 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்