அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

🕔 March 19, 2020

– ஹனீக் அஹமட் –

க்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டார்.

அதன்போது மாவட்டத்தில் தெரிவான 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிகூடிய விருப்பு வாக்குளை தயா கமகே பெற்றிருந்தார். அவர் பெற்ற விருப்பு வாக்குகள் 68,201 ஆகும்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாஸ அணியினர் பிரிந்து சென்று, ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணியாக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சி பலமிழந்த நிலையில் உள்ளது.

இதன் காரணமாகவே, அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

கடந்த அரசாங்கத்தில் தயா கமகே அமைச்சராகவும், அவரின் மனைவி அனோமா கமகே பிரதியமைச்சராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள்;

  1. ரணில் விக்ரமசிங்க
  2. ரவி கருணாநாயக்க
  3. சுனேத்ரா ரணசிங்க
  4. முகம்மட் பைறூஸ்
  5. சண்குகநாதன் குகவரதன்
  6. அஜந்த பெரேரா
  7. பேராசிரியர் சந்திம குணவர்த்தன
  8. தினசிறி தலல்லாகே
  9. டைடஸ் பெரேரா
  10. எஸ்.ஏ. பினார சாந்தரூபன்
  11. கிரிஸ்மால் வர்ணசூரிய
  12. சுதத் ஜயசுந்தர
  13. உபுல் மலவரன
  14. ருவன் லியன குணவர்த்தன
  15. ஏ.பி.எஸ். லியனகே
  16. அமல் புஸல்லாகே
  17. சிசில் கிந்தல்பிட்டிய
  18. ஜெரான ஜகதீஸன்
  19. உதார ரத்நாயக்க
  20. ஒசல ஹேரத்
  21. எம்.எஸ். ஹிலார் முகம்மத்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்