தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் 19 பேருக்கு ஓய்வூதியம் இல்லை

🕔 March 3, 2020

– அஹமட் –

08ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவடைதற்கு 06 மாதங்கள் முன்னதாகவே கலைக்கப்பட்டுள்ளமை காரணமாக, 19 தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவுடன் கலைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் தமிழர்களும், முஸ்லிம்களுமாக மொத்தம் 49 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் தமிழர்கள் 29 பேர், முஸ்லிம்கள் 20 பேர்.

ஆரம்பத்தில் 21 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருந்தபோதும், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அவரின் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநராகப் பதிவியேற்றார். இதனால், முஸ்லிம்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை 20ஆக குறைந்தது.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் கட்சி ரீதியாக தமிழ் உறுப்பினர்களில் எண்ணிக்கை

  • தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 16
  • தமிழ் முற்போக்கு முன்னணி – 06
  • ஐக்கிய தேசியக் கட்சி – 03
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02
  • ஈ.பி.டி.பி – 01
  • சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 01

கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் கட்சி ரீதியாக முஸ்லிம் உறுப்பினர்களில் எண்ணிக்கை

  • சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 07
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 05
  • ஐக்கிய தேசியக் கட்சி – 05
  • சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 03

08ஆவவது நாடாளுமன்றம், அதன் பதவிக் காலத்துக்கு முன்னராகவே கலைக்கப்பட்டமை காரணமாக, மொத்தம் 66 உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வதற்கு ஆகக்குறைந்தது 05 வருடங்கள் தொடர்ச்சியாக உறுப்பினர் பதவியை வகித்திருத்தல் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்