ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு

🕔 February 27, 2020

க்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது தேசிய பட்டியலின் ஊடாக களமிறங்க கூடும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ராகமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க மௌனமாக இருப்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவை தலைவராகக் கொண்ட சமகி ஜன பலவேகய எனும் கூட்டணியில் பிரதான கட்சியாக இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments