ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

🕔 February 17, 2020

டக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ரிப்கான ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதன்போது அவரை 25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 05 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ரகசிய பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் எனவும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில் அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கை 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

தலைமன்னார் பகுதியில் 40 ஏக்கர் நிலத்தை போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடியாகக் கையகப்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் ரிப்கான் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தொடர்பான செய்தி: றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்