வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

🕔 February 12, 2020

நாட்டில்நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது.

அத்தோடு – நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகல்வி அமைச்சுக்கு காதார அமைச்சு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

வெப்பத்திலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  • அடிக்கடி தண்ணீர் குடித்தல்
  • அதிக சர்க்கரை பானங்களை உட்கொள்வதைத் தவிர்த்தல்
  • மறைக்கும் தலைக்கவசங்களை அணிதல் அல்லது வெளியில் இருக்கும்போது குடைகளைப் பயன்படுத்துதல்
  • தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்தல்
  • வெள்ளை நிற ஆடை அணிதல்
  • அதிக சூடாக இருக்கும்போது முகத்திலும் கைகளிலும் தண்ணீரைப் பயன்படுத்துதல்
  • வெப்பம் மிகவும் தீவிரமாக இருக்கும்போது, காலை 11 மணி முதல் மாலை 3.00 / 3.30 மணி வரை கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல்

இதேவேளை பாடசாலைகள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

  • பாடசாலையில் போதுமான குடிநீர் வழங்குதல்
  • முடிந்தால் ஒரு காகித விசிறியைக் கொண்டு வர ஆலோசனை வழங்குதல்
  • இந்த விஷயத்தில் பாடசாலைகளில் முதலுதவி குழுக்களுக்கு இந்த விடயம் தொடர்பாக பயிற்சி அளித்தல்
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
  • சுகாதார பிரச்சினைகளை விரைவாக அடையாளம் கண்டு, முதலுதவி வழங்குதல், தேவைப்படும்போது உடனடியாக மருத்துவ சிகிச்சையும் வழங்குதல்
  • சிறந்த காற்றோட்டத்திற்காக வகுப்பறைகளில் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைத்தல்
  • குணமடையும் வரை நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

Comments