இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை

🕔 February 12, 2020

ந்து சமுத்திரப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை, நில அதிர்வுவொன்று பதிவாகியுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைப் பக்க திசையில் இந்த அதிர்வு நிகழ்ந்துள்ளது.

அதிகாலை 2.34 மணிக்கு ஏற்பட்ட இந்த அதிர்வு 5.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments