சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம்

🕔 February 10, 2020

ஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

கடந்த 5 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில், முன்னணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பொது செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments