ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் மனைவிக்கு விளக்க மறியல்

🕔 February 6, 2020

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்க நியோமலி ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மேற்படி இருவரும், அங்கு தமது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

இதனையடுத்து, இவர்கள் இவரும் கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்காக பிரான்ஸ் நாட்டில் இயங்கும் எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில், லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன, அவரின் மனைவி ஊடாக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்களை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமையன்று உத்தரவிட்டிருந்தது.

தொடர்பான செய்தி: ஸ்ரீலங்கன் விமாசேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் மனைவியை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்