ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான்

🕔 January 6, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு விஞ்ஞான பாடத்துக்குரிய ஆசிரியர் ஒருவரை வழங்குமாறு, அந்தப் பாடசாலையின் அதிபர், அடிக்கடி வலயக் கல்விப் பணிப்பாரை நினைவுபடுத்தியமை காரணமாக, குறித்த பாடசாலையை வலயக் கல்விப் பணிப்பாளர் பழிவாங்கியுள்ளார்.

இதனை வலயக் கல்விப் பணிப்பாளரே, தொலைபேசி உரையாடலொன்றின் ஊடாக ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான பாட ஆசிரியர் என்கிற பெயரில், தலைக்கு ஆள் வழங்குவதென்றால் வழங்க முடியும். ஆனால், ஜனவரியில் பொருத்தமான ஆசிரியர் ஒருவரை வழங்குவேன் என்று நான் கூறினேன். ஆனால், அறபா வித்தியாலய அதிபர்; விஞ்ஞான பாடத்துக்கான ஆசிரியரை வழங்குமாறு, என்னிடம் ஆளுக்கு மேல் ஆள் அனுப்பினார், அதனால்தான் சில மாதங்களில் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள, சுகயீனமுற்றுள்ள ஒரு ஆசிரியரை வழங்கியுள்ளதாக, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் குறித்த தொலைபேசி உரையாடலில் கூறியுள்ளார்.

அதாவது, அறபா வித்தியாலயத்தின் அதிபர், தனது பாடசாலையில் நிலவும் விஞ்ஞான பாட ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புமாறு, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரை அடிக்கடி கேட்டுக் கொண்டமையானது, குறித்த வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், குறித்த பாடத்துக்கான ஆசிரியராக பொருத்தமற்ற ஒருவரை, அறபா வித்தியாலயத்துக்கு நியமித்து, அறபா வித்தியாலய அதிபரை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு, அறபா வித்தியாலயத்தை பழி தீர்த்திருக்கிறார் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் .

உண்மையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரின் இந்த நடவடிக்கையானது ‘ஊழல்’ எனும் வரையறைக்குள் அடங்கும் என்பதை அவர் அறிவாரா?

“அரச உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, தனது விருப்பு – வெறுப்புகளுக்கிணங்க அல்லது தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது” ஊழலாகும்.

அந்த வகையில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அதிபர் மீது, தனக்குள்ள ஆத்திரத்தை வெளிக்காட்டுவதற்கு, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை, உடனடியாக எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார்

வலயக் கல்விப் பணிப்பாளரின் குரல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்