நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

🕔 January 4, 2020

க்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அனுமதிப்பத்திரம் காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தமிட்ட ரஞ்சன்

இதன்போது தன்னை கைது செய்ய வந்த பொலிஸாரை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

Comments