முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு

🕔 January 2, 2020

– றிசாத் ஏ காதர் –

ண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவி முஸாதிகா வீட்டுக்கு இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத் சென்றிருந்தார்.

இதன் போது முஸாதிகா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆளுநர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.

மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவி முஸாதிகா எதிர்கால கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக இதன்போது உறுதியளித்த ஆளுநர், அங்கு மடிக்கணிணி ஒன்றினை அன்பளிப்பாக வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலுள்ள சாபி நகர் எனும் கிராமத்தில், மாணவி முஸாதிகாவின் வீடு அமைந்துள்ளது.

தொடர்பான கட்டுரை: முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள்

Comments