ஹப்புதளையில் விமான விபத்து; 04 பேர் பலி

🕔 January 3, 2020

விமானப் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானமொன்று ஹப்புத்தளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த விமானத்தில் பயணித்த 04 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரவில பகுதியில் இருந்து 04 பேருடன் பயணத்தை ஆரம்பித்த விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம் விழுந்த இடத்துக்கு அருகிலிருந்த வீட்டில் வசித்த பெண் காயமடைந்த நிலையில், ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமானம் உடைந்து விழுந்த பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments