சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

🕔 December 30, 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை சட்ட ரீதியான நடவடிக்கை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடந்த 27ஆம் திகதி அழைப்பு விடுத்த போது, இதனை வாய்மொழி மூலமாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க கூறியுள்ளார்.

டிசம்பர் 20 ம் திகதி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை பொலிஸார் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கான சரியான நெறிமுறைகளும் மேற்படி கைது அமைந்ததா என்பது குறித்து பதில் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோர தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவு செய்தது.

இதனையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை கைது செய்யும் போது முறையான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி கூடவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்