சுனாமி நினைவு தினம் இன்று: உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி

🕔 December 26, 2019

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 15 வருடங்களாகின்றன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 9.25 முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் 02 நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தில் சுமார் 35 ஆயிரம் பேர் இலங்கையில் உயிரிழந்தனர். 05 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.

சுனாமியால் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் வருடத்தின் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்