ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

🕔 December 23, 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்குமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை ஆராய்ந்த நீதவான், ராஜிதவுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் சாரதி மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் எனக் கூறி, அந்த ஊடக சந்திப்பில் இருவரை அறிமுகப்படுத்தினார்.

அந்த இருவரும் – தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது, வெள்ளை வேன் கடத்தலுக்குப் பொறுப்பாக இருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

தற்போது மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜித சேனாரத்னவே அவ்வாறு கூறுமாறு தமக்கு சொல்லிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர் என, செய்திகள் வெளியாகி உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்