எம்மிடம் முறையிட்டால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்: சிற்றுண்டிசாலை செய்தி குறித்து, வைத்தியசாலை அத்தியட்சகர் பதில்

🕔 December 22, 2019

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக பேஸ்புக் பக்கத்தில் புகார் தெரிவித்திருக்கும் நபர், அது தொடர்பில் வைத்தியசாலை நிருவாகத்திடம் ஏன் நேரடியாக முறைப்பாடு செய்யவில்லை என்று, அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் கேள்வியெழுப்பினார்.

‘அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார்’ எனும் செய்தி வெளியானதை அடுத்து, ‘புதிது’ செய்தித்தளத்தை உடனடியாகத் தொடர்பு கொண்ட வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர்; “பேஸ்புக்கில் புகார் தெரிவித்துள்ளவரின் நோக்கம் சிறந்ததென்றால், அவர் எம்மிடம் ஏன் முறையிடவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; “சம்பந்தப்பட்ட செய்தியில் ‘நிர்வாகம் இதனை கவனிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன?’ என்று கேட்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவித்துள்ள நபர், இதனை எம்மிடம் ஏன் கூறவில்லை? அவர் எங்களிடம் முறையிட்டால்தானே அதுபற்றி எமக்குத் தெரியும். எமக்குத் தெரியாத ஒரு விடயம் தொடர்பில், நாம் எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ள முடியும்?” என்றார்.

அதேவேளை, “இந்த முறைப்பாடு குறித்து, வைத்தியசாலை நிருவாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும்” வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிர் உறுதியளித்தார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையினை, அந்த வைத்தியசாலையின் நலன்புரி அமைப்பு நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார்

Comments