24ஆம் திகதி வரை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு விளக்க மறியல்

🕔 December 19, 2019

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு சந்திப் சம்பத் எனும் இளைஞரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணி முன்வைத்த பிணைமனு இதன்போது நிராகரிக்கப்பட்டது.

கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று தினம் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments