கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

🕔 December 14, 2019

– அஹமட் –

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் 06ஆவது ஆளுராக நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத் நேற்று முன்தினம் வியாழக்கிழமை, திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்த வைபவத்தில் ஆளுநரின் நெருங்கிய நண்பரும், நலன் விரும்பியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதன்போது, ஆளுநர் அனுராதா மற்றும் சரத் வீரசேகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர், பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தமையிலான ‘மெத்தா சமாஜ’ அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களாக ஊடகவியலாளர் றிசாட் மற்றும் சட்டத்தரணி பைறூஸ் ஆகியோர் நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments