தேர்தல் கால குற்றங்கள் பற்றி அறிவீர்களா? அவற்றுக்கான தண்டனைகள் பாரதூரமானவை

🕔 November 13, 2019

தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு லஞ்சம் வழங்குதல், உபசாரங்கள் செய்தல், முறையற்ற வகையில் பலவந்தப்படுத்தி ஆதரவைக் கோருதல் போன்ற நடவடிக்கைகள் தேர்தல் கால குற்றங்களாகக் கருதப்பட்டு, அவற்றினைப் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறான குற்றங்களுக்கு உள்ளாகுவோர் 300 ரூபா அபராதம் செலுத்த நேரிடுவதோடு, மூன்று வருடங்களுக்கு அவர்களின் பிரஜாவுரிமையை இழக்கும் நிலையும் ஏற்படும்.

தேர்தல் காலத்தில் செய்தித்தாள்களில் பொய்யான தகவல்ளைப் பிரசுரித்தல் அல்லது அச்சிடல் போன்றவையும்,  அவ்வாறான செயல்களுக்குச் செலவு செய்தலும் தேர்தல் கால குற்றங்களாகும். இவ்வாறான குற்றங்களுக்கு 300 ரூபா அபராதமும், மூன்று வருடங்களுக்குப் பிரஜாவுரிமையை இழக்கும் தண்டனையும் வழங்கப்படும்.

இதேவேளை, பிறிதொரு நபருக்காக அல்லது பிறிதொரு நபராகத் தோற்றி வாக்களிக்கச் செல்லுதல், வாக்குச் சீட்டினை சேதப்படுத்துதல், வாக்குச் சீட்டினை மாற்றியமைத்தல்,  வாக்குச் சீட்டினைக் காட்டுதல் போன்றவை தேர்தல் கால குற்றங்களாகக் கருதப்படும்.

இவ்வாறான குற்றங்களைப் புரிவோர் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனையுடன், ஏழு வருடங்களுக்குப் பிரஜாவுரிமையை இழக்கும் நிலைக்கும் ஆளாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்