ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள்

🕔 September 10, 2019

ரச தொலைக்காட்சி சேவையான ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன கொண்டு வந்ததை அடுத்து, அரசாங்கத் தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

தனக்கு கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டு வருவதாக, வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்திறனற்ற முகாமைத்துவத்தை மாற்றுவதற்கு ஜனாதிபதி தடையாக இருந்த நிலையிலேயே, இந்த நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளதாக, ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை ரணில் நிரப்புவதற்குகு முயற்சித்து வந்த நிலையில், அதனை ஜனாதிபதி தரப்பு தடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா கிறிக்கட் சபையின் முன்னாள் தலைவருமான திலங்க சுமதிபால, அந்த சபையில் எந்தவொரு பதவியையும் வகிப்பதற்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தடை விதித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்