பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர்

🕔 August 23, 2019

மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் ராஜாங்க அமைச்சர்களாக இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகளை அடுத்து, இவர்கள் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்படி இருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் ராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

பைசல் காசிம் – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சராகவும், அலி சாஹிர் மெளலானா – ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், இதுவரை தனது ராஜாங்க அமைச்சர் பதவியை மீண்டும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்