10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை

🕔 August 21, 2019

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை, இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை மாற்றுவதற்காக 2013 ஆம் மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஏ-350, 900 விமானங்கள் 08 ஐ கையகப்படுத்துவற்கான உடன்படிக்கை நிறைவு செய்தமை தொடர்பான அறிக்கையை கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன்நெத்தி சபையில் முன்வைத்தார்.

இதனுடன் தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழிநடத்தல் நட்டமும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரச வங்கிகள் மற்றும் இலங்கை கனிய எண்ணெய் கூட்டுதாபனத்திற்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த கடனின் அளவு 146 பில்லியன் ரூபாய் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்