நிந்தவூர் கடலரிப்பு: தற்காலிக தீர்வு வழங்குவதாகக் கூறியவர்கள் எங்கே?

🕔 August 18, 2019

பாறுக் ஷிஹான்

ம்பாறை மாவட்டம் – நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றது.

இதனைத் தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  தற்போது தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க கடற்கரை பகுதியில் மண் மூட்டைகளினால் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும்  பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்குறுதிகளை வழங்கி விட்டு சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, மீனவர்களின் வாடிகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்ட போதும், அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

குறித்த கடல் அரிப்பினால் மீன் வாடிகள் பாதிப்புற்றுள்ளதோடு கரையோரத்திலுள்ள 40க்கும்அதிகமான  தென்னை மரங்களும் அழித்து விடும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள   உயர் அதிகாரிகள் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நேரில் சென்று குறித்த  கடல் அரிப்பு பிரதேசத்தினை பார்வையிட்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்