இலங்கை வரலாற்றில் அதிகளவு லஞ்சத் தொகை வாங்கிய நபர்கள் கைது

🕔 October 15, 2015

Bribe - 098சுங்க அதிகாரிகள் மூவர், பாரிய தொகையொன்றினை லஞ்சமாகப் பெற்றமை தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 125 மில்லியன் ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக பெறப்பட்ட லஞ்சத் தொகை இதுவென கூறப்படுகின்றது.

சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜினதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக மற்றும் உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்காக, வௌிநாட்டு நிறுவனமொன்று கொண்டு வந்த சில பொருட்களை விடுவிப்பது தொடர்பிலேயே, மேற்படி லஞ்சத் தொகை கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் வைத்து, மேற்படி பணம் கைமாற்றம் செய்யப்பட்ட வேளையிலேயே,  குறித்த சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்