பாடசாலைக்குள் அடாத்தாக நுழைய முற்பட்டவரை சுட்டுக் கொன்ற படை வீரர் கைது

🕔 July 4, 2019

க்மீமன – உபானந்த வித்தியாலயத்திற்குள் அடாத்தாக நுழைய முற்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேற்படி பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் காயமடைந்த நபர், பின்னர் உயிரிழந்தார். 

இன்று பகல் 12.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. 

சந்தேகநபர் பாடசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து, அவரது பணிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்தவர் 39 வயதுடைய ஆண் ஆவார்.

Comments