04 பேருக்கு மரண தண்டனையை அமுலாக்கும் ஆவணத்தில், ஜனாதிபதி கையெழுத்து

🕔 June 26, 2019

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில், 04 பேருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் ஏற்கனவே தான் கையொப்பம் இட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக தலைவர்களுடனான சந்திப்பில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மேற்படி நால்வருக்குமான மரண தண்டனை விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குற்றத்தைப் புரிந்தோருக்கு, மரண தண்டனையை அலுலாக்குவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments